” மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் அரசின் சார்பில் மன்னிப்பு கோருகின்றோம்.” – என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
” தோட்ட உதவி முகாமையாளர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டுள்ளார். அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பி, விசாரணையை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளேன். அந்த விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் நடைபெற்ற பின்னர் 24 மணிநேரத்துக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்துக்கு சென்றார். குடும்பத்தின் சார்பில் முன்னிலையானார். நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்ச்சஸ் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். மாத்தளை சம்பவம் தொடர்பில் அரசு என்ற வகையில் நாம் செயற்பட்டுள்ளோம்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
