மாலிங்கவின் சாதனை முறியடிப்பு!

சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் -ஹசன் முறியடித்துள்ளார்.

அத்துடன், ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

ரி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் கடந்த (17ம்திகதி ) ஓமானில் ஆரம்பமாகியது.

இதில் முதல் சுற்றின் பி குழுவுக்கான இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஒட்டங்களால் ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல்- ஹசன் 4 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ரி 20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற லசித் மலிங்கவின் 107 விக்கெட் சாதனையை சகிப் அல் -ஹசன் முறியடித்தார்.

இதுவரை மொத்தம் 89 ரி 20 போட்டிகளில் விளையாடி உள்ள சகிப் அல்- ஹசன், மொத்தம் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். மலிங்க 107 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 3ஆவது இடத்திலும் (99 விக்கெட்), பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 4ஆவது இடத்திலும் (98 விக்கெட்), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5ஆவது இடத்திலும் (95 விக்கெட்) உள்ளனர்.

மேலும், ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000 இற்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை சகிப் அல் -ஹசன் பெற்றுக்கொண்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles