மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 03ஆம் திகதிவரை பிரதேச சபையின் நடவடிக்கைகளை தலைவர் இன்றியே முன்னெடுத்துச் செல்லுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் பதிவியிலிருந்து இராஜிநாமா செய்ததாக தெரிவித்து, சபைத் தலைவர் பதவியை இன்னொரு நபருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவனெல்லை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எச்.பீ. சந்தன குமார ஜயவந்தலவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணைகளின் பின்னரே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நிதிமன்ற நீதிபதிகள் குழாம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபர்கமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ உள்ளூராட்சி ஆணையாளர், மாவனெல்லை பிரதேச சபை, கேகாலை தெரிவத்தாட்சி அதிகாரி ஆகியோா் பிரதிவாதிகளாக ஆஜராகியிருந்தனா்.
மாவனெல்ல பிரதேச சபைக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் தனது பதவியை இராஜிநாமா செய்ததாக கருதி, தன்னை அந்த பதவியிலிருந்து நீக்கி இன்னுமொருவரை நியமிக்க பிரதிவாதியான ஆளுநர் தயாராகியிருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளாா்.
ஆளுநரின் இந்த செய்பாடு சட்டவிரோதமானது என்று தெரிவித்து, அந்த தீர்மானத்தை கைவிடுமாறு உத்தரவு பிரப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளாா்.
