மிகை உற்பத்தியால் குப்பைத் தொட்டிகளுக்குள் செல்லும் மரக்கறி: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு!

 

நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் நிரம்பல் அதிகரித்துள்ளதால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடைகளில் அதிகப்படியான மரக்கறிகள் குவிந்துள்ளன.
இந்நிலையில் சந்தையில் கேள்வி – விற்பனை குறைவடைந்துள்ளதால் தேங்கிக்கிடக்கும் மரக்கறிகள் பழுதடைந்துவருகின்றன. இவ்வாறு பழுதடைந்த பிறகு குப்பை தொட்டிகளில் வீசப்படும் கழிவுகளை குதிரைகள் உண்ணும் நிலையையும் காணமுடிகின்றது.

மறுபுறத்தில் மரக்கறி விலை தொடர்ச்சியாக குறைந்துவருவதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் திரிசங்கு நிலையில் உள்ளனர்.

இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் செயலாளரிடம் வினவிய போது,

” கடந்த காலத்தில் கிழங்கு உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் கிழங்கு விவசாயிகளும் ஏனைய மரக்கறி செய்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாகவே மரக்கறி வகைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வாறு மரக்கறி உற்பத்தி அதிகரித்துள்ளதால் சந்தையில் நிரம்பல் அதிகரித்து விலை குறைவடைந்துள்ளது.” – என்று தெரிவித்தார்.

கஜரூபன் திவ்யா

Related Articles

Latest Articles