மித்தெனிய துப்பாக்கிச்சூடு; 3 சந்தேகநபர்கள் கைது

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து இனந்தெரியாத குழுவினரால் 18ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரின் மகள் மற்றும் மகன் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் இன்று (21) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles