‘மினுவாங்கொடயில் இருந்து மொக்கா தோட்டத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை’

மஸ்கெலியா , மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும், யுவதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவல் தாக்கத்தையடுத்து, மேற்படி மூவரும் அவர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 17 பேரும் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மறுநாள் 8 ஆம் திகதி மினுவாங்கொடையில் இருந்து வந்த மூவரும் பீசீஆர் பரிசோதனைக்காக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மூவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்கின்றது.

Paid Ad