மின்சாரக் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையினால் பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள சிரமங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம், பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிரணியால் கொண்டுவரப்படவுள்ள ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் முற்பகல் 9.30 மணி முதல் பி.ப. 4.30 மணிவரை நடைபெறும்.










