இலங்கை மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கு இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மின்சாரசபையை மறுசீரமைப்பதற்கான சட்ட மூலத்தினை ஒரு மாதத்திற்குள் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவே அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.










