மின் கட்டண உயர்வு குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு பெற தீர்மானம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை பெறுவதற்கு ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேசிய சபையில் அறிவித்தது.

அதன்படி இன்று (25) இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று (24) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்ட போதே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, மின்சாரக் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க முடியுமா எனவும் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க முடியுமா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்து கேட்கப்பட உள்ளது.

இங்கு உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடந்த 2014ஆம் ஆண்டு இவ்வாறு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தேவைப்பட்டால் தன்னிடம் உள்ள ஆவணங்களை ஆணையத்திடம் அளிக்கலாம் என்றார்.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்துக்களை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் செயற்பாட்டுச் செலவுகள் தாங்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Latest Articles