மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதால், கட்டமைப்பில் இழக்கப்பட்ட பெரும்பகுதி மின்சாரத்தை, டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், எண்ணெய்க்காக 34 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தரையிறக்கப்படும் எண்ணெய், மின்னுற்பத்தி, தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் வரை, 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

எனினும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 75 நாட்களுக்கு பின்னர் தேவைப்படும் நிலக்கரி உள்ளதா என்பதிலும் பிரச்சினை உருவாகியுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள இதுவரை முன்பதிவு செய்யப்படவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த காலத்திற்கு 22 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதுடன், அதன் பொருட்டு 610 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றது.

இந்த பணம் இதுவரை திரட்டப்படவில்லை என தெரிவித்த இலங்கை , குறித்த பணத்தை திரட்ட முடியவில்லையாயின், மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles