ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர், வலிப்பு வந்ததையடுத்து ஆற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் கணேசமூர்த்தி குலேந்திரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










