எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்துத் தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விசேட பதவியொன்றை அவர் கோரியுள்ளார் என வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து அதற்கு ஆதரவளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார், அதன் மூலம் அவர் அரசியலில் மீண்டும் ஈடுபடத் தீர்மானித்துள்ளார் எனக் கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அனுர பண்டாரநாயக்க ஞாபகார்த்த மன்றம் ஏற்பாடு செய்திருந்த – வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தாம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கத் தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்கள் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் விசேட பதவியை கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளன. இது முற்றிலும் தவறான விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரே என்னிடம் வந்து எனது ஆதரவிற்கு மன்றாடினார்.
எனினும் நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கத் தீர்மானிக்கவில்லை எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
