முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் கண்ட இடத்திலேயே கைது!

முகக்கவசம் அணியாதவர்கள் நாளை முதல் கைது செய்யப்படுவார்கள் எனவும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையிலும் சிலர் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடுகின்றனர். மேலும் சிலர் உரிய வகையில் முகக்கவசம் அணிவதில்லை.

எனவேதான் முகக்கவசத்தை முறையாக அணிவதை பொலிஸார் கட்டாயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கை தொடரவுள்ளது.

Related Articles

Latest Articles