முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முகமாலையில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பிரதேசம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கிளிநொச்சி, மாவட்ட அரச
அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் இவ்வாறு கண்ணி வெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணியினை பொது மக்களிடம் கையளித்துள்ளனர்.

இதற்கான நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்கிடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும் முன்னரங்க பிரதேசமாகவும் முகமாலை
பிரதேசம் காணப்பட்டது. இதன் காரணமாக அதிகளவு கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிக்காத வெடிப்பொருட்கள் நிறைந்த பிரதேசமாக காணப்பட்ட
முகமாலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் தற்போது கண்ணி வெடி அகற்றப்பட்டு பாதுகாப்பான பிரதேசமாக உறுதிப்படுத்தப்பட்ட 316 ஏக்கர் பரப்பளவு நிலம் இன்று பொது மக்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles