ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு அக்கட்சி உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளனர். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.
சுதந்திரக்கட்சியின் உப தலைவரான திலங்க சுமதிபால கூட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.