முதலாம் திகதி நாடு திறப்பு! சுகாதார வழிகாட்டல் அறிக்கை விரைவில்!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது.


பொது போக்குவரத்து ஆரம்பமானாலும் அதில் 25 வீதமானோரே பயணிக்கலாம். சிலவேளை இந்த எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

அத்துடன், அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பிலும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles