முதலில் கோழிவந்ததா, முட்டை வந்ததா? கொலையில் முடிந்த வாக்குவாதம்!

இந்தோனேசியாவில் மதுபோதையில் கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா ? என்று தொடங்கிய கேள்வியால் , இறுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில், புலவேசி மாகாணத்தில் வசித்து வருபவர் டிஆர் என்னும் நபர். இவர், கடந்த ஜுலை 24 ஆம் திகதி தனது நண்பர் கதிர் மார்கஸ் என்பவரை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார்.

உற்சாகமாக இருவரும் மது அருந்தியும் உள்ளனர். பிறகு அடித்த போதை தலைக்கேறியநிலையில், இருவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அது என்னவென்றால்… முட்டையிலிருந்து கோழிவந்ததா இல்லை? கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்று…

இருவரும் மாறி மாறி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால், இறுதியில் அதற்கு பதில் கிடைக்கவில்லை..

எனவே, கதிர் மார்கஸ், இங்கிருந்தால் சரியாக வராது என நினைத்து அங்கிருந்து விலக ஆரம்பித்துள்ளார். ஆனால், பதில் கூறிதான் செல்ல வேண்டும் என வற்புறுத்தியுள்ளார் டிஆர். ஆனால், கதிர் மார்கஸ் அங்கிருந்து செல்லவே, இதனால் கோபமடைந்த டிஆர், கதிர் மார்க்ஸை வாகனத்தில் துரத்தியபடி சென்று ஆத்திரம் தீரும்வரை கிட்டதட்ட 15 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனால், கதிர் மார்க்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தரவே, இறந்தவரின் உடலை கைப்பற்றி டிஆரையும் கைது செய்துள்ளனர். மேலும் , அவரது கையில் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், “சந்தேக நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 18 ஆண்டுகள் வரை இவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் கோழி, முட்டை புதிரில் தொடங்கிய இந்த சண்டனை, இறுதியில் ஒருவரின் உயிரையே பறித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles