2021 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள் அறிவித்துவிட்டனர் எனவும், மாகாண முதல்வர் பதவியை இலக்குவைத்தே அவர்கள் களமிறங்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
பதுளை, பொலன்னறுவை மற்றும் குருணாகலை மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும், சவாலை ஏற்றி மாகாண முதல்வர் பதவிக்காக போட்டியிடக்கூடும் எனவும், அவர் இம்முறை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.