பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித்த ராஜபக்ச, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என நம்பப்படுகின்றது. இத்தேர்தலில் வடமேல் மாகாண முதல்வர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ச களமிறங்க திட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இதற்கான ஏற்பாடாகவே கடந்த பொதுத்தேர்தலின்போது இவர் மஹிந்தவுக்காக குருணாகல் மாவட்டத்தில் தீவிர பரப்புரைகளில் இறங்கினார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதல்வர் வேட்பாளராக போட்டியிட விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

பரந்தப்பட்ட கூட்டணியை அமைத்து கட்சி கட்டளையிட்டால் தான் ‘ரெடி’ எனவும் அவர் கூறியுள்ளார்.
மொட்டு கட்சிமீது தயாசிறி ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலவேளை மாற்று அணி பலமடையும்பட்சத்தில் அவர்களுடன் இணைந்து தயாசிறி போட்டியிடக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அவர் வடமேல் மாகாண முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
