தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், தொலைப்பேசி ஊடாக உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
‘தமிழகத்தில் மறுவாழ்வு மையங்ககளில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு குடியிருப்புகள், உட்கட்டமைப்பு வசதிகள், புலமைப்பரிசில், சுயதொழில் மற்றும் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்ற நலன்புரி திட்டங்களை முன்னெடுத்தமைக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது நன்றியை இந்த உரையாடல் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் உள்ள மலையக மக்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பாகவும் செந்தில் தொண்டமான் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடியுள்ளார்.










