” தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லை. அவ்வாறு இருந்தால் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
“ நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்த பாதைகளில் நாங்கள் பேரணி நடத்தவில்லை.நாம் சட்டத்தை மீறி செயற்படவில்லை. வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம்,எங்களுக்குத் தேர்தலே வேண்டும். அரசியல் ரீதியிலான டீல்கள் மூலம் அன்றி மக்கள் அனுமதியுடனயே ஆட்சிக்கு வருவோம்.மக்கள் ஆசிர்வாத்தின் ஊடாகவே நாம் ஆட்சிக்கு வருவோம் என்பதை இந்த ரணில் ராஜபக்ச அரசாங்கத்திடம் கூறுகிறோம்.” – எனவும் சஜித் கூறினார்.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்கள் வெள்ளத்திற்கு பயந்து விட்டனர்.இது கோழைத்தனமான அரசாங்கமாகும். இது முதுகெலும்பு இல்லாத அரசாங்கம் எனவும் அவர் விளாசித்தள்ளினார்.
அரசுக்கு எதிராக கொழும்பில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

