தொழிலாளர் தேசிய முன்னணியின் 18 பேர்கொண்ட உயர்மட்டக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டனில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமையகத்தில் கூடவுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவி உட்பட பல உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் பல முக்கிய புள்ளிகள் பொதுச் செயலாளர் பதவியை குறிவைத்து காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
என்றாலும் கட்சியின் தலைவர் பழனி திகாம்பரத்தின் நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கும் ஒருவருக்கே பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பெயர் பட்டியலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா.சிவநேசனே பெயரே முன்னிலையில் உள்ளது.
சிவநேசனை பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், தோட்டத் தலைவர்களும் இணக்கத்தை வெளிப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.