முன்னாள் அமைச்சர் மங்களவிற்கும் கொவிட்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தன்னை சந்தித்த அனைவரையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவரது அலுவலகப் பணியாளர்களையும் சுய தனிமைப்படுத்துமாறு கோரியுள்ளார்.