முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று இணைந்துகொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர், அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.










