முன்னாள் கணவர் தனுஷின் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா.

தனுஷ் – ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகிரை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விவாகரத்து பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டதாகவும், ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது.

மேலும், ஐஸ்வர்யாவின் பயணி எனும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை தோழி என அழைத்திருந்தார் தனுஷ்.

இவர் இப்படி கூறியிருந்தது பலரையும் ஷாக் ஆக்கியது. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் என பெயரை வைத்திருந்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையி, தற்போது தனது முன்னாள் கணவரின் பெயரை நீக்கிவிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று தனது அப்பாவின் பெயரை இணைத்துள்ளார்.

Related Articles

Latest Articles