‘முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எனக்கான சலுகைகள் மற்றும் வரப்பிரதாசங்களை வேண்டுமானால் முழுமையாக நீங்கிக்கொள்ளுங்கள். ஆனால் மஹிந்த ராஜபக்சவுக்குரிய பாதுகாப்பை வழங்குங்கள்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘ முன்னாள் ஜனாதிபதிகளை உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேற்றுவதற்குரிய அறிவித்தல் வந்துள்ளது. எனக்கென்றால் பிரச்சினை இல்லை. நான் எனக்குரிய வீட்டில்தான் இருக்கின்றேன்.
சந்திரிக்கா அம்மையாரை ஏன் விரட்ட வேண்டும்? அவரை அந்த வீட்டில் இருக்க விடுங்கள். அவரின் கணவரை ஜே.வி.பியினர்தான் கொன்றனர். ஜனாதிபதியாக இருந்தபோது அவர் ஒரு கண்ணை இழந்தார். சந்திரிக்கா அம்மையார் ஒருபோதும் என்னை ஆதரித்தது கிடையாது. எனவே, அவருக்கான வீட்டை வழங்குங்கள்.
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நிச்சயம் அது வழங்கப்பட வேண்டும். இது விடயத்திலும் அரசியல் வேண்டும்.” – என்றார்.










