“காணி உரிமையை வென்றெடுக்க முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் கூட்டாக களத்தில்” – இரு முனைகளில் இருந்து நடை பேரணி…..!

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.

தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நடை பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நுவரெலியாவில் இருந்தும், ஹட்டனில் இருந்தும் ஆரம்பமாகும் பேரணி தலவாக்கலையில் சங்கமிக்கவுள்ளது.

ஹட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் இருந்து சர்வமத வழிபாட்டுடன் ஆரம்பமான பேரணியில் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நுவரெலியாவில் இருந்து ஆரம்பமான நடை பேரணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Related Articles

Latest Articles