தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக்கூட்டம் நாளை (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவது, தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் அடுத்த பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபையும் இவ்வாரம் அல்லது அடுத்தவாரமளவில் காங்கிரஸின் தலைவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கூடவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணில் விக்கிரமசிங்கவையும் ஆதரிக்கும் முடிவை எடுக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.