முல்லைத்தீவு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணியில் கரைவலைத் தொழில் செய்து வரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், கயிற்றை இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல்போயிருந்தார். அவரைத் தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் காணாமல்போன மீனவரின் சடலம், கொக்குளாய் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
சடலத்தை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
அவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என்று அறியமுடிகின்றது.
அதேவேளை, முல்லைத்தீவில் வீதியில் இருந்து மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீன் வியாபாரியான அவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குரவில் உடையார் கட்டுப்பகுதியைச் சேர்ந்த ஆதிமுருகன் யோகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் அவர் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாரடைப்புக் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.