மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம்!

இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருப்பதாகவும் இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணு குண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் சர்வதேச அணு சக்தி நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்த சூழலில் ஈரானின் அணு சக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தியது.
கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணு சக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும் ஈரானின் 14 அணு சக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில் சர்வதேச அளவில் இஸ்ரேல், ஈரானுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகள் அணி திரண்டு வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி,கனடா, ஆஸ்திரேலியா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா,வடகொரியா, வெனிசூலா, ஏமன், லெபனான் உள்ளிட்ட நாடுகள் செயல்படுகின்றன. துருக்கி, அஜர்பைஜான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் எதுவும் கூறாமல் மௌனம் காக்கின்றது.

உக்ரைனுக்கு எதிரான போரின்போது ரஷ்யாவுக்கு, ஈரான் பல்வேறு வகைகளில் ஆயுத உதவிகளை வழங்கியது. குறிப்பாக ஈரானின் அதிநவீன ட்ரோன்கள் ரஷ்யாவுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய இக்கட்டான சூழலில் ஈரானுக்கு க்ராசுகா 4 என்ற ஏவுகணை தடுப்பு சாதனத்தை ரஷ்யா வழங்கியிருக்கிறது.

இந்த மின்னணு தடுப்பு சாதனம் மூலம் இஸ்ரேலின் அதிநவீன ஏவுகணைகள் நடுவானில் திசை திருப்பப்படுகின்றன. இதன் காரணமாக இஸ்ரேலிய ஏவுகணைகள் மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்பி சென்று அந்த நாட்டை தாக்குகின்றன. இது இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது.

இஸ்ரேல், ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளார்.

வடகொரியாவின் ஆயுத உற்பத்தியை பலமடங்கு அதிகரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரே நேரடியாக ஆயுத ஆலைகளுக்கு சென்று மேற்பார்வை செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு சுமார் 20 ஆயிரம் கன்டெய்னர்களில் வடகொரியா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

இதேபோல வடகொரியா தரப்பில் ஈரானுக்கும் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போதைய சூழலில் இஸ்ரேல், ஈரான் போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் எழுந்திருக்கிறது. ஒருவேளை உலகப்போர் மூண்டால் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles