மூன்று சிறுமிகளும் வீட்டைவிட்டு சென்றது ஏன்? வெளியானது தகவல்

முழு நாட்டினதும் கவனத்தைத் திருப்பிய (08) ஆம் திகதி காணாமல் போய் 09 ஆம் திகதி வீடுதிரும்பிய மூன்று சிறுமியரும் நடன நட்சத்திரங்களாகும் ஆசையில் வீட்டைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளா் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகா் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதாவது,

இந்த சிறுமியர் மூவரும் நடன நட்சத்திரங்களாகும் ஆசையில் பொழுது விடிவதற்கு முன்னரே வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனா். இவர்களில் இருவர் கைகளிலிருந்து மோதிரங்களை அடகு வைத்து 60 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனா். அதன்பின்னர், தேவையான ஆடைகளையும் கொள்வனவு செய்துள்ளார்கள். எப்படியாவது நடனக்குழு அல்லது நடன வகுப்பில் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே இவர்கள் ஆசையாக இருந்துள்ளது.

வத்தளை பிரதேசத்திலுள்ள நடன வகுப்பில் சேர்வதற்கும் இவர்கள் மூவரும் முயற்சித்து இருக்கிறார்கள். அந்த முயற்சி தோல்வியுற்றதால் அநுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ்ஸில் புறப்பட்ட அநுராதபுரம் சென்றுள்ளனர். அதன்போது குறித்த பஸ் நடத்துநர் இவர்கள் மூவரையும் சந்தேகித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் கொழும்பை வந்தடைந்த அவர்கள் எதிர்க் கட்சித் தலைவரைச் சந்திக்கவும் முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் இவர்கள் மூவர் தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

Related Articles

Latest Articles