மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய தாய் கைது – நுவரெலியாவில் துயர் சம்பவம்

வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் (12) மாலை இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விடயம் அறிந்த அயலவர்கள் உடனடியாக தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை காப்பாற்றியதுடன் இது தொடர்பில் 119 அவசர பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த மத்துரட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த தாயை கைதுசெய்துள்ளனர்.

தனது கணவர் தன்னையும், பிள்ளைகளையும் கவனிப்பதில்லை, உண்ணுவதற்கு உணவு பொருட்கள் பெற்று தருவதில்லை, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப உபகரணங்கள் பெற்று தருவதில்லை. இதனால், தொடர்ந்து பட்டினிச் சாவை எதிர்கொள்கிறோம். இதனாலேயே நஞ்சருந்தி உயிரை மாய்த்து கொள்ள முயன்றதாக அவ்விளம் தாய் விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆறு, ஐந்து மற்றும் ஒரு வயதுகளையுடைய பிள்ளைகளுக்கே இத்தாய், நஞ்சூட்டி உள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மத்துரட்ட பொலிஸார், தாய் மற்றும் பிள்ளைகளை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles