மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிமுனால் காங்கிரஸுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திரிமுனால் காங்கிரஸின் தேசியப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிராக் ஓப்ரேனுடன் தொலைபேசியில் உரையாடும் போதே அவருக்கும் முதல்வராக பதவியேற்கவுள்ள மம்தா பானர்ஜிக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திரிமுனால் காங்கிரஸ்மீது மேற்குவங்க மக்கள் கொண்டுள்ள அபரீத நம்பிக்கை மற்றும் அதன் கொள்கைகள் இலக்குகள் மீதான ஈர்ப்பின் பிரகாரமே மூன்றாவது முறையாகவும் மம்தாவின் ஆட்சிக்கு மக்கள் ஜனநாயக அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர்.
உங்கள் தலைமையில் மேற்குவங்கம் பல சாதனைகளை படைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் செந்தில் தொண்டமான் வாழ்த்தியுள்ளார்.
