மேலும் 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து படகு மூலம் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 6 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக சென்ற ஆறு பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததை அடுத்து மண்டபம் பகுதியில் இருந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பலில் மெரைன் பொலிஸார் விரைந்துள்ளதாக தெரியவருகிறது.

இரண்டு சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஆறு பேர் இவ்வாறு தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Related Articles

Latest Articles