தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து மாணவியொருவர் இன்று (12) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தலாவாக்கலை – ரத்னனீலகல என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மொனிஷா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்பத்தாருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே அவர், நீர்த்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் மேற்கொள்ள ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலவாக்கலை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
செய்தி – நீலமேகம் பிரசாந்த்










