மேல் மாகாணத்தில் இதுவரை 62,937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

மேல் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று காலைவரை 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. (62,937)

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 33 ஆயிரத்து 833 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 406 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 698 பேருக்கும் இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

குறிப்பாக நேற்று  கொழும்பு மாவட்டத்தில் 317 வைரஸ் தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 193 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 100 வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles