” மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நானும் அத்தேர்தலில் களமிறங்குவேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது. அவரின் கட்சி உறுப்பினர்களே சிரிக்கின்றனர். மைத்திரி போட்டியிட்டால் நானும் தேர்தலில் களமிறங்குவேன். மைத்திரியைவிட ஒரு வாக்கேனும் அதிகம் எடுத்து காட்டுவேன்.” எனவும் சாமர சம்பத் குறிப்பிட்டார்.










