பொருளாதாரப் போரை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய பொருத்தமான வேட்பாளரையே ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும் – என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் சிலரின் பெயர்கள் உள்ளன. அவர்களில் பொருளாதாரப்போரை வெற்றிகொள்ளக்கூடிய வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றியும் பெறுவோம்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வேறு தேர்தல் நடந்தாலும் அதனையும் எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்










