ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கொட்டிகாவத்தை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்தே சிஐடி அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
