நாமல் ராஜபக்ச ஆதரவு அணியிலுள்ள எட்டு இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளை துறக்கவுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதியால் தமது பதவிகள் பறிக்கப்படுவதற்கு முன்னர் தாமாக விலகுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ. சானக, தேனுக விதானகே, சசிந்திர ராஜபக்ச, அசோக அபேசிங்க, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீக மற்றும் சிறிபால கம்லத் ஆகியோரே இவ்வாறு பதவி விலகவுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.










