” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சென்றவர்கள், ஹமாஸ் அமைபுக்கோ அல்லது புலிகள் அமைப்புக்கோ செல்லவில்லை. அவர்கள் எதிரணியில்தான் உள்ளனர். அவர்கள் மீண்டும் கட்சிக்கு வருவதில் பிரச்சினை இருக்காது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது அணியில் இருந்து சென்றவர்கள், எதிரணி அரசியலை முன்னெடுத்தனர். கடந்த காலங்களில் அரசில் இருந்து வெளியேறி சென்றவர்கள், மீண்டும் அரசு பக்கம் வந்த சம்பவங்களும் உள்ளன. எமது அணியில் இருந்து அவர்கள் புலிகள் பக்கமோ, ஹமாஸ் அல்லது ஐஸ் பக்கமோ செல்லவில்லை. அதே நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் உள்ளனர்,எனவே அவர்கள் மீண்டும் வருவதில் பிரச்சினை இல்லை. அவர்களுடன் இணைந்து போட்டியிட நான் விரும்புகின்றேன். எமது தரப்பில் இருந்து இரு கரங்களும் நீட்டப்பட்டுள்ளன. ” – என்றார்.
