மொட்டு கட்சி உறுப்பினரின் வீட்டில் 35 பவுண் நகை மாயம் – பொலிஸில் முறைப்பாடு

கண்டி மாநகர சபை பொதுஜன பெரமுன உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீட்டுக்கு தீயிடப்பட்டதில் சுமார் 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக,(18) அவரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டியில் அமைக்கப்பட்டிருந்த கோட்டாகோகம கிளை கடந்த (09) தாக்கப்பட்டது. இதையடுத்து கண்டி போகம்பறைப் பிரதேசத்திலுள்ள கண்டி மாநகர சபை உறுப்பினர் சங்கீத் சில்வாவின் வீடும் தாக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து மேற்படி வீட்டிலிருந்த 34 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் 8 இலட்ச ரூபா ரொக்கப் பணம் உட்பட இன்னும் பெறுமதியான பல பொருட்கள் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி கே.ஜீ ரேனுகா தர்மவங்ச,கண்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காலி முகத்திடல் சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles