மொட்டு கூட்டணியிலிருந்து விலகி தனிவழி செல்கிறது சு.க.?

மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சுதந்திரக்கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இக்கூட்டணியில் விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன.

கூட்டணி அமைக்கும் நடவடிக்கை வெற்றியளிக்கும் பட்சத்தில் வடமேல் மாகாண முதல்வர் வேட்பாளராக தயாசிறி ஜயசேகர போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles