மொஸ்கோவுக்குகான விமான சேவையை இடைநிறுத்தியது ஶ்ரீலங்கன்

இலங்கையின் கொழும்புக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவுக்கும் இடையிலான விமானசேவைகள் நேற்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்அறிவித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைனுக்கு இடையே இடம்பெறும் யுத்தம் காரணமாக ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ளசர்வதேச நிதி மற்றும் விமான காப்புறுதி கட்டுப்பாடுகள்,ரஷ்யாவுக்கான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் விமானநடவடிக்கைகளை நேரடியாகப் பாதிப்பதாக நிறுவனம், நேற்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மறு அறிவித்தல் வரை
மொஸ்கோவுக்கான பறப்புகளை நிறுத்தியுள்ளதாகவும் கடுமையான சூழ்நிலையின் காரணமாக எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தால் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும்
அசௌகரியம் ஏற்பட்டால், அதற்கு விமான நிறுவனம்
வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

மேலும், ரஷ்யாவின் நிலைமையை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் நிலைமைகள் சீரானதும் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என நம்புவதாகவும் சேவைகள் இடைநிறுத்தப்படும் வரை,
கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையில் வாராந்தம் இரண்டு விமான சேவைகளை முன்னெடுத்து வந்ததாகவும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிக்கையின்
ஊடாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles