மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.03.2023) மஸ்கெலியாவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் மகளிர் அணி பிரதித்தலைவியும், பிரதேச சபை உறுப்பினருமான சுவர்ணலதா இளங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவருடமும் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் பிரிவினர் மகளிர் தின நிகழ்வுளை ஏற்பாடு செய்து நடாத்திவருகின்றனர்.
அதே போல இந்த வருடமும் எமது சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் எமது கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் மஸ்கெலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த நி கழ்வில் மலையக மகளிர் எதிர்காலமும் பொறுப்புகள் எனும் தலைப்பில் இந்த வருட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.விசேட பேச்சாளர்கள் இருவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.” எனவும் மகளிர் அணி பிரதித் தலைவி குறிப்பிட்டார்.










