ம.ம.மு. மாநாட்டில் 400 தோட்டத் தலைவர்கள் கௌரவிப்பு

மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டுவிழாவும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் Dkw கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது 400 தோட்டத்தலைவர்களை கௌரவிக்கப்படவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
” மலையக மக்கள் முன்னணி 35 வருடமாக மலையக மக்களுக்கான ஒரு சக்தி மிக்க ஒரு குரலாக ஒலித்து வருகின்றது.35 வருடங்களாக மலையக மக்களின் சந்தோசம்,கஸ்டம் என அனைத்திலும் தோளோடு தோள் கொடுத்து வருகின்றது.
மலையகத்தின் மாபெரும் சக்தியாக மலையக மக்கள் முன்னணி உருவாகுவதற்கு ஏணிப்படிகளாக காணப்பட்ட தொழிற்சங்க தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் எனவேதான் இம்மிகப்பெரிய மாநாட்டில் அவர்களை பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவிக்கின்றோம். அதேபோல தோட்ட தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லது நுவரெலியா, பதுளை,கண்டி,இரத்தினபுரி,கேகாலை ஆகிய 5 மாவட்டங்களில் இயங்கும் மலையக மக்கள்  முன்னணியின் 30 காரியாலய உத்தியோகத்தர்களையும் கௌரவிக்கபட உள்ளோம்.காரணம் மலையக மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தொழிற்சங்க ரீதியாக தீர்க்ககூடிய இடைத்தரகர்கள் அவர்களே! தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகள்,தோட்ட கம்பனிகளின் கெடுபிடிகள் என அனைத்து பிரச்சனைகளிலும் மக்களின் பக்கம் நின்று அவ்விடயத்தை மேலிடத்துக்கு கொண்டு சென்று அப்பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் காரியாலய உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் நாட்டின் நான்காவது தூணாக காணப்படும் ஊடக துறை சார்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய கௌரவம் அளிக்கப்படுவதோடு மலையக மக்கள் முன்னணி எனும் மிகப்பெரிய சாம்ராஜ்யம் உருவாகுவதற்கு அடித்தளமிட்டு அதை ஸ்தாபித்த மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் சந்திரசேகரனுக்கு தபால் தலை வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆக மொத்தம் மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டு விழாவும் மலையக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கக்கூடிய வரலாற்று மாநாடாக அமையும் என மலையக மக்கள் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles