யாழிலிருந்து மலையகம் வந்த கார் விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியில் இன்று மதியம் 2:15 மணியளவில் சொகுசு கார் ஒன்று சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து சுற்றுலா வந்தவேளையிலேயே, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது காரில் பயணஞ் செய்த இருவரும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர். இருப்பினும், விபத்தினால் கார் சேதமடைந்துள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹட்டன் வலயப் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் வழிகாட்டலில், ஹட்டன் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles