யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவரது உடைமையிலிருந்து 6 லீற்றர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பெண்ணை கைது செய்ததுடன் கசிப்பினையும் மீட்டுள்ளனர்.

அதேவேளை அந்த பெண் ஏற்கனவே பல தடவைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையிலுள்ள போதிலும் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles