யாழில் சங்கு வேட்புமனுத் தாக்கல்

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுவை இன்று புதன்கிழமை கையளித்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை முதன்மை வேட்பாளராகக் குறிப்பிட்டு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வேட்புமனுவை அவர்கள் தாக்கல் செய்தனர்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சங்குச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கூட்டணி சார்பில் வேட்பாளர்களாக தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Related Articles

Latest Articles