யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நேற் றைய தினம் இரண்டு இறாத்தல் பாணை சைக்கி ளில் கொண்டு சென்ற முதியவரிடம் இருந்து அந்தப் பாணை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
யாழ். இராசபாதையில் இருந்த வீடு நோக்கிப் பயணித்தவரிடமே நேற்று மாலை 6
மணியளவில் இவ்வாறு பாண் பறிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடுமையான வறுமை நிலவுவது உண்மை என்றாலும் மோட்டார் சைக்கிளில் வருவதற்கு பெற்றோலுக்கு உள்ள பணம் இரண்டு இறாத்தல் பாண் வாங்குவதற்கு இல்லையா எனக் கேள்வி எழுப்பிய அந்த முதியவர், அதனை தன்னிடம் கேட்டிருந்தால் தாம் ஒரு நாள் பட்டினி கிடந்தாயினும் அதனை வழங்கியிருப்பேன் என்றார்.










